Dr. Thamizhachi Thangapandian

Thangapandian Illam,
Raja Nagar, Neelangarai,
Chennai – 600 041.

"சக்தி அநந்தம்; எல்லையற்றது, முடிவற்றது, 
அசையாமையில் அசைவு காட்டுவது, 
பிணைப்பது, கலப்பது, உதறுவது, 
புடைப்பது, வீசுவது, சுழற்றுவது, 
கட்டுவது, சிதறடிப்பது, தூற்றுவது, 
ஊதிவிடுவது, நிறுத்துவது, ஓட்டுவது, 
ஒன்றாக்குவது, பலவாக்குவது, 
சக்தி குளிர் செய்வது, அனல் தருவது  
தான் வாழும் சமூக அமைப்பின் கட்டுக்கோப்புக்குள் மட்டுமே நின்று அதையே அற்புதம் என்றும் அதன் சீரழிவுகளையே அழகியலாகவும் கொண்ட படைப்பாளிகளை வரலாறு நினைவு கூர்வதில்லை. அவர்களை விமர்சிக்க நாம் மெனக்கெடவும் போவதில்லை. ஷேக்ஸ்பியர் பிரபுத்துவ காலக் கீர்த்தியையும், அதன் சீரழிவுகளை மேம்படுத்தியும் நாடகம் செய்திருந்தால் மார்க்ஸ் வீட்டின் குடும்பக் கவிஞராகச் செல்லம் பெற்றிருக்க மாட்டார். மாறாக பிரபுத்துவ கால அவலங்களை - முரண்பாடுகளின் மோதல்களை அம்பலப்படுத்தினார். அந்தக் கலையை அதற்கே உரிய தனி வடிவத்தோடு அழகுப்படுத்திச் செய்தார். 
பிரெஞ்சுப் படைப்பாளி பால்சாக்கை மாபெரும் எதார்த்த எழுத்தாளர் என்று போற்றும் எங்கெல்ஸ், "மானிட இன்பியல்" (La Come'die Humaine) என்னும் படைப்பில், பால்சாக் பிரபுக்கள் சமுதாயத்தில் முளைத்து எழுந்த முதலாளித்துவத்தின் முற்போக்கான வளர்ச்சிகளை 1816லிருந்து 1818 வரு ஆண்டு வாரியாக அழகுபடச் சித்திரப்பதாக ஆச்சரியப்படுகிறார். அத்துடன், 
அந்தக் கால கட்டத்தைப் பற்றி ஒட்டு மொத்தமாக, உத்தியோகபூர்வமான வரலாற்று ஆசிரியர்கள், பொருளாதார வல்லுநர்கள், புள்ளி விவர நிபுணர்கள் ஆசிரியர்களிடமிருந்த தெரிந்து கொண்டதைவிட அதிகமாக அந்த நூாலிலிருந்து கற்றுக் கொண்டேன். 
என்கிறார். இத்தனைக்கும் பால்சாக் அரசியல் ரீதியாக பழைய "முறைமை வாதி" (Legistimist) என்றும், அவரது மகத்தான படைப்பு பழைய நல்ல சமூகம் அழிகிறதே என்ற இடைவிடாத ஒப்பாரியே என்றும் எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். 
முதலாளித்துவக் கல்வி கொடுத்த சகல ஆயுதங்களோடும் நமது பண்டைய இலக்கிய வளத்தின் பராக்கிரம்தோடும் பாரதி களத்திலே இறங்கினான். 
தம்பி நான் ஏது சொல்வேனடா! தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை. தமிழச்சியைக்காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாக இருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது" 
என்று நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதிய பாரதியின் தமிழ்ப்பற்றை சந்தேகிக்க இடமில்லை. 
1918ஆம் ஆண்டில் விரல்விட்டு எண்ணக் கூடிய பாடல்களே 'சுதேச மித்திரன்' பத்திரிக்கையில் வெளிவந்துள்ளன. 
பார்வைக்கு காணக் கிடைத்த பாடல்களுக்கான விவரம் வருமாறு: 
எண். பாடல் தலைப்பு தொடக்கத்து அடி 
1. தேசீயக் கல்வியின் விளக்கிலே 
பெருமை திரி (8.4.1918)
2. பெண் விடுதலை விடுதலைக்கு
மகளிர் (16.05.1918) 
'தேசியக் கல்வியின் பெருமை' என்ற பாடல் ரவீந்திர நாத தாகூர் ஆங்கிலத்தில் எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இப்பாடல் நாட்டுக் கல்வி என்னும் தலைப்பில் பாரதி ஆச்ரமப் பதிப்பின் இரண்டாம் பாகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 
7. 6.2.1918 சுதேச மித்திரன் தேசீயக் கல்வியின் பெருமை ரவீந்தரநாத தாகூர் பாடலின் தலைப்பு தற்காலப் பதிப்புகளில் கரும்புத் தோட்டத்திலே என்பதாகக் காண்கிறது. பாடலின் தலைப்பு தற்காலப் பதிப்புகளில் நாட்டுக் கல்வி என்பதாகக் காண்கிறது. பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த பத்திரிகைச் சட்டத்தால், பாரதியின் பத்திரிக்கைப் பணிகள் யாவும் 1910ஆம் ஆண்டில் முடக்கப்பட்டு விட்டன. 
சென்னை வாழ்வில் 1906ஆம் ஆண்டு நின்றுபோன 'சுதேச மித்திர'னுடனான தொடர்பு 1915 பிப்ரவரி மாத முதற்கொண்டு பாரதிக்கு ஏற்பட்டது.  முதன் முதலாக 5.2.1915ஆம் தேதியிட்ட 'சுதேச மித்திரன்' பத்திரிக்கையில் வெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து என்ற பாடல் பிரசுரமாகி இருப்பதைக் காண முடிகிறது. வாழ்த்துப் பாடலுடன் ஆரம்பான தொடர்பு தொடர்ந்து நீடிக்கின்றது. இச்சமயம் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றிருந்த ஏ. ரெங்கசாமி ஐயங்கார் என்பவர் பத்திரிகையில் தொடர்ந்து பாரதி எழுதத் துணையாக இருந்தார். புதுப்பிக்கப்பட்ட இந்த தொடர்பு காரணமாக, 6.12.1915 முதல் பாரதியின் படைப்புகள் 'சுதேச மித்திர'னில் தொடர்ச்சியாகப் பிரசுரமாயின. 
விளக்கி லேதிரி நன்கு சமைந்தது
மேவுவீர் இங்கு தீக்கொண்டு தோழரே 
களக்க முற்ற இருள்கடந் தேகுவார் 
காலைச் சோதிக் கதிரவன் கோவிற்கே 
துளக்க முற்றவின் மீனிடம் செல்லுவார் 
தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார் 
களிப்பு மிஞ்சி ஒளியினைப் பண்டொரு 
காலம் நீர்சென்று தேடிய தில்லையோ? 
பாடலைப் பற்றிய சிறுகுறிப்பு:- 
பாரத நாடெங்கும் தேசிய எழுச்சியின் விளைவாகக் கிளர்தெழுந்த தேசீயக் கல்வியின் பெருமைகளையும் இந்தியத் தேசீயத் தலைவர்கள் வற்புறுத்த முற்பட்டனர். 
இந்தியத் தலைவர்களின் அடியை யொற்றித் தமிழக அரசியல் தலைவர்களும், சமூக - கல்விச் சிந்தனையாளர்களும் தமிழக மக்களிடையே தேசீயக் கல்வியின் அவசிய - அவசரத் தேவையை வற்புறுத்திக் கூட்டங்கள் நடத்தினர். 
சென்னை நகரில் ஓ.எம்.ஐ.ஏ., கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர், எஸ். அருண்டேல் போன்ற பிரமுகர்கள் தேசீயக் கல்வியினால்தான் இந்திய நாடு முன்னேற்றமடைய முடியும் என்று பேசினர். 
இந்தக் கூட்டத்தின் தொடர்ச்சியாக 7.4.1918 அன்ற பெஸன்ட் அம்மையின் தலைமையிலும் சென்னை நகரில் ஓர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸர். எஸ். சுப்பிரமணிய ஐயர், ரங்காசாரியார், ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர், வெங்கடராம ஐயர், நாராயண மூர்த்தி, நாகபூஷணம், மாசிலாமணி பிள்ளை, வி.சி. சேசாசாரி, டி.எம். கிருஷ்ணசாமி ஐயர், சி.எஸ். கோவிந்தராஜ முதலியார், எஸ். அநந்தராம ஐயர், ஜி.எஸ். அருண்டேல், எஸ். சத்தியமூர்த்தி - போன்ற சென்னை நகரப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 
இந்தச் சமயத்தில், சுதேச மித்திரன் பத்திரிகையானது பெரியோர் வாக்கு என்னும் மகுடத்தின் கீழ் தேசீயக் கல்வியின் பெருமை என்னும் உள்தலைப்பில் தேசீயக் கல்வி அபிவிருத்தி விஷயமாய் இந்திய தேசாபிமானிகளான பெரியோர் சொல்லி யனுப்பி யிருக்கும் செய்தியின் விவரம் என்ற குறிப்புடன் பாரதியின் மொழிபெயர்ப்புப் பாடலை வெளியிட்டது. 
பாடலைத் தொடர்ந்து மகாத்மா காந்தி, அரவிந்த கோஷ், லோகமான்ய திலகர் - ஆகியவர்களின் கருத்துரைகளும், ராஷ்விகாரி கோஷ், கபர்தே, மோதிலால் நேரு, விபினசந்திரபாலர் போன்றோர் அனுப்பிய தந்திகளும் பற்றிய தகவல்கள் சுதேச மித்திரனில் பிரசுரமாகி உள்ளன. 
சென்னையில் கொண்டாடப்பட்ட தேசீயக் கல்வி வார நிகழச்சிக் கூட்டம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது என்பது கவனிக்கதக்கது. 
'சுதேச மித்திரன்' பத்திரிகையில் பிரசுரமான பாடல் பாரதி ஆச்ரமப் பதிப்பின் இரண்டாம் பாகத்தில் நாட்டுக் கல்வி (பக். 11-12) என்னும் தலைப்பில் ஒருசில பாடபேதங்களுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 
"ஆங்கிலத்தில் ரவீந்தரநாத் டாகூர் எழுதியதை சி. சுப்பிரமணிய பாரதி தமிழ் ஆக்கியது" என்று குறிப்பு சுதே மித்திரன் இதழில் பாடலின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது. 
பாரதி, பாரதிதாசன் இருவருமே தம் கவிதைகளில் மரபுபிறழாமல் புதுமைகளை வசப்படுத்த முனைந்ததில் காட்டிய அதே தீவிரத்தை பெண்ணுரிமை உள்ளிட்ட சமூக சீர்திருத்தக் கருத்துகளை அழுத்தமாக முன்வைப்பதிலும் காட்டிருக்கின்றனர். பாரதிதாசன் தம்மைவிட சற்றே முன்காலத்தவரான அல்லது சமகாலத்தில் வாழ்வதற்க்கு இயற்கை வாய்ப்பளிக்காத பாரதி தமது கவிதைகளில் பெண்ணுரிமை குறித்து பேசியதைக்காட்டிலும் விரிவானதளத்தில் பெண்ணுரிமையை அணுகியிருக்கிறார்.
சிற்றிலக்கிய மரபு பெண்ணுடலை விதந்தோத, சித்தர்மரபு பெண்ணுடலை வெறுத்தொதுக்க பாரதியோ பெண்ணை வழிபடுபொருளாகச் சுட்டுகிறார். பெண் வழிபாடு என்பதே பெண்ணடிமை முறையின் மற்றுமொரு புறவேற்றுமை வடிவம்தான் எனும்போதும் பாரதி அவர்காலத்தில் அதை தன்னந்தனியராய் முன்வைத்ததை ஒரு கட்டுடைப்பாகவே கொள்ள வேண்டும். சக்தியை வழிபட்ட கவிஞர்கள் யாரும் பெண் கல்வியையும் ஆண் பெண் சமத்துவ உரிமையையும் பற்றி வாய் திறந்ததில்லை. பாரதியே அதை முன்னெடுக்கிறார். 
கவிதைசொல் முறையில் பாரதியை அடியொற்றித் தொடரும் பாரதிதாசன் பெரியாரியத்தின் தாக்கத்தால் கைம்பெண் கொடுமை, மறுமணம், பாலிய விவாகம், பெண்கல்வி, சொத்துரிமை, திருமண உரிமை, காதல்மண உரிமை, திருமணம் மறுத்து உடன்பாடாக வாழவும் உரிமை, சுயமரியாதைத் திருமணம், கருத்தடை என்று வெவ்வேறு கோணங்களில் நின்று பெண்ணுரிமையின் அவசியத்தை வலியுறுத்துகிறார். 
பாரதி, பாரதிதாசன் இருவருமே பெண்ணுரிமை எனும்போது தன்பால் மனச்சாய்வு இன்றியே அதை அணுகியிருக்கிறார்கள். பாரதிதாசன் பெரியாரியத்தை உள்வாங்கிக் கொண்டவர் என்பதால் அவர்பாடல்களில் அதன் ஆழ அகலங்கள் வெளிப்படுகிறன்றன. 
பெண்ணுரிமை எனும் குரல் தமிழ்ச்சூழலில் முதன்முதலாய் ஒலிக்கத்துவங்கிய காலமது. இன்றைய கவிதைக் கோட்பாடுகளும் பெண்ணுரிமை குறித்த மறுவாசிப்புகளும் அவர்களை வெறும் பிரச்சாரகர்களாகவே வகைப்படுத்தலாம். சொல்லவந்த கருத்தில் முரண்பாடு உண்டென்றும் உதாரணங்களைச் சுட்டலாம். ஆனால் அவைகள் ஒருபோதும் இருவரது கவிமனதை, பெண்ணுரிமை மீது காட்டிய தீவிரத்தை சந்தேகிக்கலாகாது. சமூகப்பொதுமனதின் பிரதிபலிப்புகள் சிற்சில இடங்களில் தென்படுவதை அடிக்கோடிட்டு முன்னோடிக்கவிஞர்களை பழிதூற்ற முனைவது இலக்கிய அறமும் ஆகாது.
"பெண்ணைத் தியாகம், அன்பு, கருணை முதலியவற்றின் உருவமாகப் போற்றும் கருத்தாக்கங்கள் போலியானவை. இவை ஒடுக்கப்பட்ட அவளுக்கு ஒரு போதையான இலட்சியத்தில் நிலைநிறுத்தி, பின் அவளை யதார்த்த நிலைக்கு அடங்கிப் போகச் செய்யும் உத்தியாகும்"".  சக்தித் தத்துவம் அவளை முழுமையாக வளர முடியாதபடி செய்கின்ற ஒரு போன்சாய்ப் புதிராகும். பெண்ணைத் தெய்வம் என ஒரு பக்கம் புகழ்ந்து, மறுபக்கம் அவளது இருப்பை மறுக்கும் ஆணாதிக்கக் கருத்தியலின் வெளிப்பாடு இத்தத்துவம். பெண் பிற தெய்வீகப் புனைவுகள் தேவையற்றவள். அவள் மனித உயிரி மட்டுமே. அவளுக்கு மகுடம் சூட்டும் புனைவுகள் இன்னொரு விதமான ஒடுக்கு முறையே, எனும் நவீனச் சிந்தனையின் பால் நான் நிற்கிறேன். 
இத்தகைய நவீனத்துவ, பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்தால், பாரதியின் 'சக்தி' கருத்தாக்க சிந்தனைகள் பலமுரண்களைத் தரலாம் நமக்கு. ஆனால், "சமுதாயத்திலுள்ள சமத்துவமின்மையைப் போக்க முதலில் பாலின ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்கிற பெண்ணியப் பார்வை உடையவன் பாரதி. அவனது பெண் விடுதலை அல்லது பெண்ணியம் 'சக்தி' கருத்தாக்கத் தளத்தில் நின்று, சமூகம், பண்பாடு ஆகியவற்றின் இயக்கவியல் தன்மையை நன்கு புரிந்து கொண்டு பழமைக்கும், புதுமைக்குமான முரண்பாட்டில், புதுமையின் வழி நின்று புதிய பெண்ணுலுகத்தை, ஆற்றல் மிகு பெண்ணை உருவாக்குவதற்கான முற்போக்கு நவீன சிந்தனைப் போக்கில் அமைந்திருந்தது"
பெண் விடுதலை குறித்து வெறும் பேச்சோடு நின்றவனல்ல பாரதி. 'பெண்கள் சம்பாஷனைக் கூட்டங்கள் நடத்தியவர்' - அவற்றைப் பத்திரிக்கைகளிலும் பதிவு செய்தவர். 'காசி' எழுதுவது எனும் தலைப்பில் புதுச்சேரியில் பெண்கள் "மஞ்சள் குங்குமம் (ஸம்பாஷணை) கூட்டம்" ஒன்றில் நடந்தது என ஸ்ரீமதி கிரியம்மா அவர்களின் பேச்சைப் பின் வருமாறு பதிவு செய்கிறார்: 
"ஆரம்பத்தில் பார்வதி, லஷ்மி, ஸரஸ்வதி முதலிய படங்களுக்குப் பூஜை. பின் விடுதலைப் பாட்டுக்கள் பாடப்பட்டன என்ற அறிமுகத்துடன் ஸ்ரீமதி கிரியம்மாவின் பேச்சு," இப்போது நாம் முயற்சி செய்ய வேண்டிய விஷயம் பெண்விடுதலை. பல்லாயிரம் வருஷங்களாக நாம் அடிமைப்பட்டு வருகிறோம். தெய்வம் தானாக நமக்கு விடுதலை கொடுத்ததா? இல்லை 'உங்களுடைய வழி இதுதான்', என்று ஒரு சட்டம் ஏற்படுத்தி வைத்தது. இப்போது நாம் 'இப்படி இருக்க மாட்டோம் என்றால், சரி, ஆனால் பாருங்கள். உங்களுக்காக இன்னொரு வழி உண்டாக்கி இருக்கிறேன். அதன்படி நடவுங்கள்' என்று கூறி நம்மை ஊக்கப்படுத்துகிறது. ................ நாம் குழந்தைகள். நாம் அழுதால் லோகமாதா பராசக்தி உணவு கொடுப்பாள்""  (பக்கம் 130 - பாரதியார் கட்டுரைகள் - மாதர், பூம்புகார் பதிப்பகம்).
பாரதியாரைச் 'சர்வரோக நிவாரணியாக'ச் சித்தரிப்பதும் தவறு - குறிப்பிட்ட இனத்தில் பிறந்து வளர்ந்ததால் அவன் மீது இந்துத்துவ, ஆர்யகுல மேன்மையை உயர்த்திப் பிடித்தவன் என அவனைக் குறுக்குவதும் தவறு. இதனை மேலும் தெளிவாக்க அ.மார்க்ஸ் டால்ஸ்டாய் பற்றிய லெனினது பதிவைச் சுட்டுகிறார். "டால்ஸ்டாயின் படைப்புகள், பார்வைகள், கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. ஒரு புறம் ஒப்பற்ற சித்திரங்களாக ருஷ்ய வாழ்க்கையைப் படைத்துக் காட்டி, உலக இலக்கியச் செல்வக் குவியலுக்கு முதல் தரமான காணிக்கைகளைச் செலுத்திய மேதையை, மாபெரும் கலைஞனைக் காண்கிறோம். மறுபுறம் கிறித்துவின் மீது மயக்கம் கொண்ட நிலப்பிரபுவைக் காண்கிறோம்.....
புதுச்சேரி கூட்டம் ஒன்றில் ஸ்ரீமான் சி.சுப்ரமண்ய பாரதியின் குமாரியாகிய ஸ்ரீதங்கம்மா, 'சியுசீன்' என்ற சீனத்து ஸ்திரீயின் கதையை வாசிக்கிறாள். இந்தக் கதையைப் பாரதியார், "ஆசியாவில் பெண்விடுலைக் கொடியை நாட்ட வேண்டுமென்று பாடுபட்டவர்களில் இவளும் ஒருத்தி" என்பதாக அறிமுகம் செய்து, சீனாவில் அப்பொழுது நடைபெற்று வந்த குடியரசுக்கு வேர் நாட்டியவர்களில் அவரும் ஒருவர் என்று சொல்லி, அந்த அம்மையார் சீன பாஷையில் தகுந்த பாண்டித்யம் பெற்றவர்; கவிதா சக்தியும் உடையவர்; ஜப்பான் சென்று ஐரோப்பிய நவீனக் கல்வி பயின்றவர்; சீனத்து அரசில் அப்போது கோலோச்சிய மஞ்சு வம்சத்திற்கு எதிராக சீர்திருத்தக் கட்சி தொடங்கி மாணாக்கர்களுக்குப் போதித்தவர் என்றெல்லாம் பட்டியலிட்டு விட்டு, மிக முக்கியமாக, ஒன்று சொல்கிறார் - "சீன சம்பிரதாயங்களின்படி கணவனுடன் கூடி வாழும் வாழ்க்கை இவளுடைய இயற்கைக்குப் பொருந்தவில்லையாதலால், இவள் தன் கணவனிடமிருந்து சமாதானமாகவே பிரிந்து வந்துவிட்டாள்" (பக்கம்:132, பாரதியார் கட்டுரைகள் :  மாதர் : பூம்புகார் பதிப்பகம்). 
நிறைவாக அந்த "மஞ்சள் குங்குமம்" கூட்டம் எப்படி முடிகின்றது தெரியுமா? ஸ்ரீசகுந்தலா, சீனபாஷையில் 'சியு சீன்' என்ற ஸ்திரி பாடிய பாட்டின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பாடுகின்றார். 
விடுதலைக்கு மகளி ரெல்லோரும் 
வேட்கை கொண்டனம்; வெல்லுவமென்றே
திட மனத்தின் மதுக் கிண்ணமீது 
சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம்
"வெல்லுவோம் என்றே திடமனத்தின் மதுக்கிண்ணத்தின் மீது நாம் உறுதி எடுத்துக் கொள்வோம் என்று சொன்ன முற்போக்காளானால், அதனையும், திருவிளக்குப் பூஜைக்குப் பின்னரே, 'மஞ்சள், குங்குமக் கூட்டம்' வாயிலாகவே செய்ய முடிந்திருக்கிறது. அன்றைய காலக்கட்டத்தில், "உலகமெங்கும் விடுதலை அருவி நீர் காட்டாறு போலே ஓடி அலறிக் கொண்டு வரும் சமயத்தில் நீங்கள் நாவு வறண்டு ஏன் தவிக்கிறீர்கள்?" என அந்த ஸ்திரிகளை ஒன்று கூட்டிக் கேள்வி கேட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்த, புதுச்சேரி பாரதியார் வீட்டில் திருவிளக்கு பூஜை செய்ய வேண்டியிருந்த காலக் கட்டத்தைப் பற்றிய புரிதல் இல்லை என்றால், பாரதியின் முரண்களைப், பிற்போக்குத்தனம் எனும் சிமிழுக்குள் சுலபமாக அடைத்துவிடுகின்ற அபாயம் நிகழ்ந்துவிடும். 
சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த இனெஸ்ஸா ஆர்மன்ட் என்கிற பெண்மணிக்கு மாமேதை லெனின் எழுதிய கடிதம் நம் நினைவிற்கு வருகிறது. அந்த அம்மையார் உழைக்கும் பெண்களுக்காகத் தான் வெளியிட எண்ணி இருந்த ஒரு பிரசுரத்தைப்பற்றி லெனினுக்கு எழுதி கருத்துக் கேட்டிருந்தார். அதற்கு லெனின் எழுதிய இருந்த பதில் மிகவும் சுவையானது. "உங்கள் பிரசுரத்தில் மூன்றாவது கோரிக்கையாக நீங்கள் எழுதிய இருக்கும் காதலில் விடுதலைக்கான கோரிக்கையை முன்றிலுமாகத் தூக்கி எறிந்துவிடுங்கள்" எனக்கூறிய லெனின் அதற்கான காரணங்களைக் கீழ்க்கண்டவாறு கூறுவார்: 
"(விடுதலைக் காதல்) என்பது உண்மையில் ஒரு தொழிலாளி வர்க்கக் கோரிக்கை அல்ல. அந்தச் சொற்றொடரின் மூலம் நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் அல்லது நாங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள்?" 
என்று கேட்டுவிட்டு, "காதலில் விடுதலை என்பதற்குப் பொருளாதாரப் பிரச்சினைகள், மத, சமூக, சட்ட, நீதிமன்றக் கட்டுப்பாடுகள், பெற்றோரின் தடைகள் போன்றவற்றலிருந்து விடுதலை வேண்டும் என்று சொன்னீர்களானால் சரி, அதை ஒரு தொழிலாளிவர்க்கக் கோரிக்கையாகக் கொள்ளலாம். மாறாக, காதலில் உள்ள ஆழமான அம்சங்கள் அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளதல் அல்லது முறை தவறாமை போன்றவற்றிலிருந்து விடுதுலை வேண்டும் என நீங்கள் கருதினீர்களேயானால் அதற்குப் பெயர் விடுதலைக் காதல் அல்ல. அவை இன்றைய சமுதாய நிலையில் பூர்ஷ்வாக் கோரிக்கைகளாகுமேயொழிய பாட்டாளிவர்க்கக் கோரிக்கையாகாது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி இருப்பது நம் நினைவிற்கு வருகிறது. 
விதவைகள் மறுமணத்தை ஆதரிக்கும் பாரதி முற்போக்கான பல கருத்துக்களை உதிர்த்துவிட்டுப் போயிருக்கிறார். 'வாழ்க நீ எம்மான்' எனத் தான் வாழ்த்துப் பஞ்சகம் பாடிய ஸ்ரீமான் மோகன்தாஸ் கரம் சந்திரகாந்தி, விதவைகள் மறுமணப் பிரச்சினைபற்றித் தனது 'நவஜீவன்' பத்திரிக்கையில் ஏனோதானோவென்ற எழுதி இருப்பதை கண்டு வெடித்து, அவருக்கே உரித்தான தர்க்க நியாயங்களுடன் எளிய தமிழில் புள்ளி விவரங்களைத் துணையோடு, 'இந்தியாவில் விதவைகளின் பாதாபகரமான நிலைமை' என்று கட்டுரையில் சாடும் பாங்கு ரசிக்கத் தக்கது. 
"அதனாலேதான் ஹிந்து தேசத்து விதவைகளின் வாழ்க்கை நரக வாழ்க்கையினும் கொடியதாய் எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகிறது. பால்ய விதவைகள் புனர் விவாகம் செய்து கொள்ளலாமென்று ஸ்ரீமான் காந்தி சொல்லுகிறார். அதைக் கூட உறுதியாகச் சொல்ல அவருக்குத் தைரியம் இல்லை; மழுப்புகிறார். எல்லா விதவைகளும் மறுமணம், செய்துகொள்ள இடம் கொடுப்பதே இந்தியாவில் மாதருக்குச் செய்யப்படும், அநியாயங்கள் எல்லாவற்றிலும் பெரிதான இந்த அநியாயத்திற்குத் தகுந்த மாற்று. மற்ற பேச்செல்லாம் வீண் கதை." 
என்று அந்தக் கட்டுரைய முடிக்கிறார் பாரதி. தன்னுடைய குடும்பத்திலுள்ள விதவைகளுக்கு மறுமணம் செய்து வைக்கமாட்டேன் என்று கூறிய மகாத்மாவையும் பாரதியையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். திருநெல்வேலி கலவரத்தில் மறைந்துபோன ஒரு வீரரின் இளம் மனைவியைப் பாரதியார், மறுமணம் செய்துகொள்ளுமாறு தூண்டிய ஒரு சம்பத்தையும் கவியோகி சுந்தானந்த பாரதியார் குறிப்பிடுகிறார்.
தேசிய உணர்வு ஊட்டுதல், நாட்டுப்பற்று வளர்த்தல், மேற்கத்திய பண்பாட்டை விட பண்டைய இந்து அல்லது ஆரிய நாகரிகம் மேன்மையானது என உணர வைத்தல், பெண் விடுதலையினை தெய்வ நம்பிக்கையின் ஊடாகக் கொண்டு செலுத்துதல் என அன்றைய காலகட்டத்தில் பாரதிக்குப் பல அத்தியாவசியங்கள் இருந்தன. தளைகளின் ஊடாகத் தன் பாதையைச் செதுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அவன்.
பாரதியாருக்கு மார்க்ஸீயப் பரிச்சயம் குறைவு, பாரதி சாதி ஒற்றுமை பற்றிப் பேசினானே ஒழிய சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசவில்லை எனக் காத்திரமான விமர்சனங்கள் பல உண்டு. ஆனால் பெண்மையைச் 'சக்தி'  ஆகா உருவகித்ததில், 'மதம்' என்கிற பிம்பத்தின் கட்டமைப்பையும் மீறி, அதற்குள் வீர்யத்தைப் புகுத்தியவன் பாரதி.
பாரதியாருடைய கவிதையிலே தெளிவு, எளிமை இரண்டுக்கும் மேலாக ஒரு வேகம் இருந்தது. இந்த வேகம் எப்படி வந்தது என்று ஆராய்ந்து பார்க்கும்போதுதான் உயர்கவிதை எப்படித் தோன்றுகிறது என்பது தெரியவரும். உள்ளத்தில் உள்ள உண்மை ஒளி, வாக்கினிலும் வந்ததனால் ஏற்பட்டதொரு வேகம் இது. எப்படி வந்தது என்பது தான் கலை ரகசியம். எப்படியோ வந்தது, பாரதியார் உயர்ந்த கவியானார். இப்படித் தோன்றிய வேகத்தால்தான் கம்பனும், இளங்கோவடிகளும் காரைக்காலம்மையாரும், ஆண்டாளும், மாணிக்கவாசகரும், பட்டினத்தடிகளும், ஜெயங்கொண்டானும், கோபால கிருஷ்ண பாரதியாரும், தாயுமானவரும், அவரவர் அளவில் உயர்கவிகள் ஆகிறார்கள். இந்தக் கவிதை உண்மையை அலசிப் பிய்த்து எடுத்துப் பார்க்க முடியாது - ஆனால் சூஷமமாக, இருப்பது என்பது நிதரிசனமாகவே தெரிகிறது. உயர்கவிதையின் உயிர் இது. 
பாரதி கட்டுரை ஒன்றில் "நான் எல்லா வகையிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லா விட்டால் இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன். நீ அடித்து வெளியே தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிடவும் வேண்டும். இங்கனம் கூறும் தீர்மான வார்த்தையை, இந்திரிய இன்பங்களை விரும்பியேனும், நகை, துணி முதலிய வீண் டம்பங்களை இச்சித்தேனும் நிலையற்ற உயிர் வாழ்வைப் பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக் கூடாது. சிறுது சிறிதாக, படிப்படியாக ஞாயத்தை ஏற்படுத்திக் கொள்வோம் என்னும் கோசா நிதானக் கட்சியாளரின் மூடத்தனத்தை நாம் கைக் கொள்ளக்கூடாது. நமக்கு ஞாயம் வேண்டும். அதுவும் இந்த க்ஷணத்தில் வேண்டும். ............... இப்படிச் சொல்லுவதால் நமக்கு மரணமே நேரினும் நாம் அஞ்சக்கூடாது. ஸகோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு, தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலால் ஸகோதரிகளே, பெண் விடுதலைக்காக இந்த க்ஷணத்திலேயே தர்மயுத்தம் தொடங்குகள். நாம் வெற்றி பெறுவோம். நமக்கு மஹாசக்தி துணை செய்வாள்" என்று பாரதி வலுவான வார்த்தைகளால் பெண் விடுதலை பேசுகிறார். அதற்குப் பராசக்தி துணை செய்வாள் என்றும் கூறுவதை நோக்க வேண்டும். (பக்:61 : பாரதியின் சொல்லும் கருத்தும் - சக்தி என்ற கருத்தாக்கம் - அ. பிரேமா) பெண் விடுதலைக்கான மிகத் தெளிவான, உறுதியான குரல் இது.
இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்
இறப்பை நீக்கி அமிர்தத்தை ஊட்டுவாய் 
அருளும் இந்த மறையொலி வந்திங்கே 
ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப்பீர்தமைத் 
தெருள்உறுத்தவும் நீர்எழு கில்லிரோ? 
தீயநாச உறக்கத்தில் வீழ்ந்துளீர்! 
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ 
வான்ஓ ளிக்கு மகா அர்இ யாம்என்றே.
சக்தி மகிழ்ச்சி தருவது, சினம் தருவது, 
வெறுப்பு தருவது, உவப்பு தருவது, 
பகைமை தருவது, காதல் மூட்டுவது
உறுதி தருவது, அச்சம் தருவது
கொதிப்பு தருவது, ஆற்றுவது
சக்தி முகர்வது, சுவைப்பது, தீண்டுவது, கேட்பது, காண்பது
சக்தி நினைப்பது, ஆராய்வது, கணிப்பது, தீர்மானம் செய்வது
கனாக் காண்பது, கற்பனை புரிவது, தேடுவது, சுழல்வது, 
பற்றி நிற்பது, எண்ணமிடுவது, பகுத்தறிவது, 
சக்தி மயக்கம் தருவது, தெளிவு தருவது சக்தி உணர்வு"
 
 * * * * *