தன்விவரப் பட்டியல் எழுதுதல்

நீங்கள் செய்ய வேண்டியதென்ன?

நீங்கள் ஒரு விண்ணப்பத்தைக் கண்டிப்பாய் சமர்ப்பிக்க வேண்டும்
தன்விவரப் பட்டியலை இணைக்க வேண்டும்.

 

உங்கள் வாழ்நாள் எவ்வளவு நீண்டதாய் இருந்தபோதிலும்
உங்கள் தன்விவரப் பட்டியல்
சுருக்கமாக இருக்க வேண்டும்.

 

கச்சிதமாக இருங்கள், தகவல்களைத் தேர்ந்தெடுங்கள்.
நிலவெளிகளை முகவரிகளாக மாற்றுங்கள்
தெளிவற்ற ஞாபகங்களை திட்டவட்டமான தேதிகளாய்.

 

உங்கள் காதல்கள் அனைத்திலும் திருமணம் சார்ந்ததை மாத்திரம்
குறிப்பிடுங்கள்,
குழந்தைகளில்
பிறந்தவற்றை மாத்திரம்.

 

உங்களுக்கு யாரைத் தெரியும் என்பதை விட
எவர் உங்களை அறிந்திருக்கிறார்
என்பதே அதிக முக்கியம்.

 

பிரயாணங்கள் - வெளிநாடென்றால் மாத்திரம்.
பிணைப்புகள் - எதற்கு என்பதுதானேயன்றி
ஏன் அல்ல.
விருதுகள் - ஆனால் எதற்கென்பதற்காக அல்ல.

 

நீங்கள் உங்களிடமே பேசியதில்லை
என்பதுபோல எழுதுங்கள்
உங்களைத் தொலைவிலிருந்து நீங்கள் பார்த்துபோல.

 

நாய்களை, பூனைகளை, மற்றும் பறவைகளை,
நினைவுப் பரிசுளை, நண்பர்களை, கனவுகளை விட்டுவிடுங்கள்.

 

மதிப்பை விட்டு
விலையைக் குறிப்பிடுங்கள்,
சாராம்சத்தை விட்டு தலைப்பினை.
ஷீ அளவு, ஒருவர் எங்கே போகிறார் என்பதல்ல
யாரென்று யூகிக்கப்பட்டீரோ அவரென.

 

ஒரு காது தெரியும்படி ஒரு புகைப்படம் இணையுங்கள்.
முக்கியமானது அதன் வடிவமேயொழிய,
அது என்ன கேட்கிறது என்பதல்ல.

 

அது என்ன கேட்கிறது?
காகிகதங்களை வெட்டிச் சிதைக்கும் யந்திரத்தின்
கடகடக்கும் ஒலியினை.

விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா(1923- )

சமகால உலகக் கவிதை - பிரம்மராஜன்

 

 

 

சிறு தன் விவரக்குறிப்பு

சிறு தன் விவரக்குறிப்பு

 

     சுமதி என்கிற தமிழச்சி தங்கப்பாண்டியன் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தார். விருதுநகரில் பள்ளிப்படிப்பும், மதுரையில் கல்லூரிப் படிப்பும் முடித்தபின் சென்னைவாசி. சென்னை, இராணிமேரிக் கல்லூரியில், ஆங்கில விரிவுரையாளராகப் பனிரெண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.

ஆஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களது ஆங்கிலப் படைப்புக்களில் அவர்தம் அலைந்துழழ்வு உணர்வு குறித்து ஆராய்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மொழிபெயர்ப்பிலும், தமிழ் அரங்கச் செயல்பாடுகளிலும் இவருக்கு ஆர்வமும், பங்கேற்பும் உண்டு.

தேர்ந்த கவித்துவம், சொல்வளம், தொடர்ச்சியான கவிதை இயக்கம், அரசியல் உள்ளீடு கொண்ட படைப்பு பலம், தொன்மையும் நவீனமும் இணையும் பாங்கு, அடித்தட்டு மக்களின் மீதான அக்கறை, தமிழ் தேசிய நலனில் கரிசனம், உலகமயமாக்கலின் அடையாள அழிப்பிற்கு எதிர்திசையில் தமிழின் பன்முக அடையாளங்களை தேடிப் படைக்கும் ஆற்றல் - என விரிவான கவித்தளத்தில் இவரது கவிதைகள் இயங்குகின்றன.

 

கவிதைத் தொகுப்புகள்:    

எஞ்சோட்டுப் பெண், வனப்பேச்சி, மஞ்சணத்தி, அருகன், அவளுக்கு வெயில் என்று பெயர்.

நேர்காணல்தொகுப்பு:  

பேச்சரவம் கேட்டிலையோ.

கட்டுரைத் தொகுப்புகள்:  

பாம்படம், சொல் தொடும் தூரம், மயிலறகு மனசு, நவீனத்துவவாதி கம்பன், உறவுகள் - எஸ்.பொ., மண்வாசனை, பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை.

விமர்சன நூல்கள்:     

காலமும் கவிதையும் - தமிழச்சியின் படைப்புலகம், காற்றுகொணர்ந்த கடிதங்கள்.

ஆங்கிலப் புத்தகம்:     

Island to Island.

Brief Profile (English)

Brief Profile (English)

T. Sumathy aka Thamizhachi Thangapandian obtained her M.A., M.Phil., in English Literature from Thiagarajar Arts College, Madurai, Tamil Nadu, India. She worked as a Senior-Grade Lecturer in English at Queen Mary’s College, Chennai, Tamil Nadu, India, from 1996-2008. As a research scholar, she was the recipient of the AIC (Australia - India Council) Fellow Award (2004) and obtained her Doctorate from the University of Madras (2010).

Acclaimed as a Tamil poet, her areas of interest include post – colonial literatures (especially Sri Lankan and Australian), diasporic literatures (especially Sri Lankan Tamil Diaspora), translation, criticism and performing arts (Tamil Theatre).

She has to her credit Fifteen (15) publications in Tamil and One (1) publication in English.

Tamil Publications:

          Enjottu Penn (2004), Uravukal Espo (2004), Vanapechi (2007), Pecharavam Ketilaiyo (2009), Manjanathi (2009), Naveenathuvavaathi Kamban (2010), Katru Konarntha Kadithangal (2010), Kalamum Kavithayu, (2010), Sol Thodum Thoram (2010), Pampadam (2010), Aruhan (2011), Mayileragu Manasu (2012), Manvasanai (2013), Avalukku Veyil Endru Peyar (2015), Poonaikal Sorgathirku Selvathillai (2015)

English Publication:

Island to Island - The Voice of Sri Lankan Australian Playwright: Ernest Thalayasingham Macintyre (2013)

 

Currently, she is a freelance writer and a performer.

Email: vanapechi@yahoo.co.in

Website: www.thamizhachithangapandian.com

தன் விவரக்குறிப்பு

Download Tamil Profile

பெயர் தமிழச்சி தங்கபாண்டியன்
முகவரி

'தங்கபாண்டியன் இல்லம்', முதல் பிரதான சாலை, இராஜா நகர், நீலாங்கரை, சென்னை-600115, தமிழ்நாடு, இந்தியா.

நாடு இந்தியா
மின்னஞ்சல் vanapechi@gmail.com
தொலைபேசி +91 98412 08151

 தமிழச்சி தங்கபாண்டியன் @ த.சுமதி தன் விவரக் குறிப்பு

        சென்னை, இராணிமேரிக் கல்லூரியில், ஆங்கில விரிவுரையாளராகப் பனிரெண்டு ஆண்டுகள் பணிபுரிந்த த.சுமதி (தமிழச்சி தங்கபாண்டியன்), ஆஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களது ஆங்கிலப் படைப்புக்களில் அவர்தம் அலைந்துழழ்வு உணர்வு குறித்து (குறிப்பாக, ஆஸ்திரேலிய வாழ் இலங்கைத் தமிழரான, எர்னஸ்ட் தளையசிங்கம் மெக்கின்டையர் எனும் நாடக ஆசிரியரது ஆங்கில நாடக ஆக்கங்களை முன்வைத்து) சென்னைப் பல்கலைக்கழகத்தில், முனைவர் (Ph.D) பட்டம் பெற்றுள்ளார்.

      விருதுநகர் மாவட்டம் - மல்லாங்கிணறு எனும் கிராமத்தில் பிறந்த இவர், தமிழச்சி எனும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதுகிறார். இவரின் எஞ்சோட்டுப் பெண் (மித்ரா பதிப்பகம்) எனும் முதல் கவிதைத் தொகுப்பு, தமிழ் இலக்கியம் 2004 என்கிற இலக்கிய விழாவில் சென்னையில் ஜனவரி 2004இல் வெளியிடப்பட்டது.

      இவரது கவிதைகள், சிறு பத்திரிக்கைகளிலும், வெகுஜனப் பத்திரிக்கைகளிலும் பிரசுரமாகியுள்ளன. பன்னாட்டு அரங்குகளின் இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கு பெற்றிருக்கின்றார்.

      ஆஸ்திரேலிய இந்திய கவுன்சில் (AIC) எனும் அமைப்பின் விருதான AIC Fellow 2002 எனும் விருதினை பெற்று, ஆஸ்திரேலிய மோனாஸ் (Monash) பல்கலைக்கழகத்தில் தன் கள ஆய்வை முடித்தவர். கரிசல் மண் மக்களது வாழ்க்கையினைப் பதிவு செய்திருக்கின்ற இவரின் முதல் தொகுப்பான எஞ்சோட்டுப் பெண் எனும் கவிதை நூலிற்கு கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது 2004, மகாகவி பாரதியார் அறக்கட்டளையின் கல்வியியல் விருதான மகாகவி பாரதியார் விருது 2005 ஆகிய விருதுகள் அளிக்கப்பட்டிருப்பதோடு, அந்நூலின் சில கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, நந்தனம் அரசு கலைக்கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ் பட்டப் படிப்பிற்கான பாடத் திட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளன. 

      இவரது படைப்புலகம் குறித்து, தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண் - ஓர் ஆய்வு : அழகப்பா பல்கலைக்கழகம் (2006), தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண் கவிதைகளில் பன்முகத்தன்மை - பச்சையப்பன் கல்லூரி (2010), தமிழச்சி தங்கப்பாண்டியன் கவிதைகளில் பன்முகப் பார்வை - மதுரைக் கல்லூரி (தன்னாட்சி - 2012) மற்றும் பன்முகப்பார்வையில் தமிழச்சியின் வனப்பேச்சி - பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி (தன்னாட்சி - 2013) ஆகிய நான்கு இளமுனைவர் (M.Phil) பட்ட ஆய்வுகள் தமிழில் அளிக்கப்பட்டுள்ளன.

                        தமிழச்சியின் படைப்புகளில் பெண்ணியச் சிந்தனைகள் எனும் தலைப்பில் இவரது படைப்புகள் குறித்து கொடைக்கானல், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

      அர்ச்சுனா பதிப்பகம் சார்பில், டிசம்பர் 2004இல் உறவுகள் - எஸ்.பொ, தொகுப்பு பா. இரவிக்குமார் & த.சுமதி புத்தகம் வெளிவந்துள்ளது.

      இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வனப்பேச்சி (உயிர்மை பதிப்பகம்) - டிசம்பர் 2007 இல் வெளியிடப்பட்டது. இந்த தொகுப்பிற்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஏலாதி இலக்கிய விருது - 2008, மற்றும் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது - 2009 அளிக்கப்பட்டுள்ளன.

      தமிழ்நாடு அரசு, 2009ஆம் ஆண்டிற்கான பாவேந்தர் பாரதிதாசன் விருதினை இவருக்கு அளித்து கௌரவித்துள்ளது. 

      களம் புதிது இலக்கிய குழு கடந்த இருபது ஆண்டுகளாக திருமுதுகுன்றத்தை (விருத்தாசலம்) மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. 2010ம் ஆண்டிற்கான சிறந்த கவி ஆளுமை விருது இவருக்கு களம் புதிது இலக்கியக் குழு சார்பாக வழங்கப்பட்டுள்ளது.

      கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி அறக்கட்டனையின் 2013 ஆண்டிற்கான சிறந்த கவிஞர் விருது வழங்கப்பட்டுள்ளது.

பாரதியார் சங்கத்தின் 2015 ஆண்டிற்கான பாரதி பணிச் செல்வர் விருது வழங்கப்பட்டுள்ளது.

      பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்த இவரது நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு பேச்சரவம் கேட்டிலையோ (உயிர்மை பதிப்பகம்) எனும் தலைப்பில் ஜனவரி - 2009 இல் வெளிவந்துள்ளது.

      அன்னை முத்தமிழ் பதிப்பகம் சார்பில், டிசம்பர் 2010இல் நவீனத்துவவாதி கம்பன் புத்தகம் வெளிவந்துள்ளது.

      சிறு பத்திரிக்கைகளில் வெளியான இவரது கவிதைகளின் தொகுப்பு மஞ்சணத்தி (உயிர்மை பதிப்பகம்) எனும் கவிதை நூலாக டிசம்பர் - 2009 இல் வெளிவந்துள்ளது.

      டிசம்பர் 2010 இல், சென்னையில் உயிர்மை பதிப்பகத்தின் சார்பில், காற்று கொணர்ந்த கடிதங்கள், காலமும் கவிதையும் (தமிழச்சியின் படைப்புலகம்), சொல் தொடும் தூரம், பாம்படம் ஆகிய நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

      குமுதம் தீராநதியில் வெளியான இவரது கவிதைகளின் தொகுப்பு அருகன் (உயிர்மை பதிப்பகம்) எனும் கவிதை நூலாக டிசம்பர் - 2011 இல் வெளிவந்துள்ளது.

      அவள் விகடன் பத்திரிக்கையில் வெளியான இவரது கட்டுரைகளின் தொகுப்பு மயிலறகு மனசு எனும் விகடன் பிரசுரமாக மே - 2012 இல் வெளிவந்துள்ளது.        

      அவள் விகடன் பத்திரிக்கையில் வெளியான இவரது கட்டுரைகளின் தொகுப்பு மண்வாசனை எனும் விகடன் பிரசுரமாக ஜூலை - 2013 இல் வெளிவந்துள்ளது.

      புலம் பெயர்ந்து வாழ்கின்ற இலங்கைத் தமிழ்ர்கள் குறித்த இவரது ஆங்கிலப் புத்தகம் Island to Island - 2013 ஜனவரியில் எமரால்ட் பதிப்பகத்தாரால் வெளியடப்பட்டுள்ளது. 

டிசம்பர் 2015 இல் சென்னையில் அவளுக்கு வெயில் என்று பெயர் மற்றும் பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை (உயிர்மை பதிப்பகம்) ஆகிய இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

மார்ச் 2017 இல் விடியல் அறக்கட்டளையின் சார்பாக இவரின் படைப்புத் திறமை சமூக சேவை பன்முக ஆற்றலைப் பாராட்டி பாரதி விருது அளிக்கப்பட்டது.

தேர்ந்த கவித்துவம், சொல்வளம், தொடர்ச்சியான கவிதை இயக்கம், அரசியல் உள்ளீடு கொண்ட படைப்பு பலம், தொன்மையும் நவீனமும் இணையும் பாங்கு, அடித்தட்டு மக்களின் மீதான அக்கறை, தமிழ் தேசிய நலனில் கரிசனம், உலகமயமாக்கலின் அடையாள அழிப்பிற்கு எதிர்திசையில் தமிழின் பன்முக அடையாளங்களை தேடிப் படைக்கும் ஆற்றல் என விரிவான கவித்தளத்தில் இவரது கவிதைகள் இயங்குகின்றன.

      இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை, த.சுமதி என்கிற தன் இயற்பெயரிலே எழுதுகின்ற இவர், மொழிபெயர்ப்பு இலக்கியத்திலும் முனைப்பு கொண்டு, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களது சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, சென்னைப் பல்கலைக்கழகத்திலும், பன்னாட்டு தேசிய கருத்தரங்கங்களிலும் அவை குறித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

      பரதநாட்டியத்தினை முறையாகப் பயின்றிருக்கின்ற இவருக்கு, அரங்கம் எனப்படுகின்ற மேடை நாடகத் தளத்தில் ஆர்வமும், பங்கேற்பும் உண்டு.
 

தமிழ் நாடக அரங்கில் பங்களிப்புகள் :

 • தமிழ் நாடகப் பரப்பிலே குறிப்பிடத்தகுந்த நாடக நெறியாளரான அ.மங்கை அவர்களது இயக்கத்தில், கவிஞர். இன்குலாப் அவர்களது குறிஞ்சிப் பாட்டு எனும் இரண்டு மணி நேர நாடகத்தில் பங்கேற்றுள்ளார். சென்னை மற்றும் சேலத்தில் இந்நாடகம் நடத்தப்பட்டது. ஒடுக்கப்பட்ட மரபுகளையும், பழம்பெரும் கலாச்சார வேர்களையும் மீட்டெடுக்கும் முயற்சியாக இந்நாடகம் அறியப்பட்டது.
 • 'வெளி' ரங்கராஜன் அவர்களுடைய நாடகவெளி சார்பாக சென்னை அலையன்ஸ் ப்ராங்கை அரங்கில் தமிழின் பழம்பெரும் எழுத்தாளர் கு.ப.ரா.வின் அகலிகை நாடகத்தில் அகலிகையாகப் பங்கேற்று நடித்திருக்கின்றார். நவீனப் பெண்ணிய குரலாக இந்நாடகம் பாராட்டப்பட்டது.
 • இவர் சூர்ப்பநகையாக நடித்த, கு. அழகிரிசாமியின் வஞ்சமகள் எனும் நவீன நாடகம், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் அரங்கேற்றப்பட்டு, நன்கு வரவேற்கப்பட்டது.
 • இன்னொரு ஏதோ எனும் நவீன நாடகத்தை, கனடா வாழ் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சிறீசுவுடன் அரங்கேற்றியுள்ளார்.
 • தியேட்டர் லேப் என்கின்ற நாடகக் குழுவினருடன் இணைந்து சென்னை, அலையன்ஸ் ப்ராங்கை அரங்கில் மகாத்மா காந்தியின் கடைசி ஐந்து விநாடிகள் எனும் மொழிபெயர்ப்பு நாடகத்தில் (தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி) சி. ஜெயராவின் இயக்கத்தில் நடித்திருக்கிறார். அதிகாரத்திற்கு எதிரான அமைதியின் குரலாக இந்நாடகம் பார்வையாளர்களால் விமர்சிக்கப்பட்டது.
 • பிரசன்னா ராமஸ்வாமியின் பாரதியார் கவிதைகள் குறித்த இவரது நாடகம் கலாஷேத்ராவிலும், சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும் பரவலான கவனத்தைப் பெற்றது.
 • விஸ்டம் பதிப்பகத்தாரின் சிறந்த இளவயது நாடகக் கலைஞர் விருது, நிகழ்த்துதல் கலைக்காக இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது

*****

Profile (English)

Download English Profile

Name Dr. Thamizhachi Thangapandian
Address

Thangapandian Illam, Raja Nagar, Neelangarai, Chennai – 600 041.

Country India
Email vanapechi@gmail.com
Phone +91 98412 08151
RESUME

Name

:
Dr. T.SUMATHY aka Dr. THAMIZHACHI THANGAPANDIAN

 

Address

:

Thangapandian Illam, Plot No.8, First Main Road, Raja Nagar, Neelangarai, Chennai – 600 041, Tamil Nadu, INDIA.

 

Phone

:

+91-44-24491858

 

Mobile

:

+91 98412 08151

 

E-mail

:

vanapechi@yahoo.co.in

 

Website

:

www.thamizhachithangapandian.com

Occupation

:

Former Lecturer (Senior Grade), Department of English, Queen Mary’s College (auto) affiliated to The University of Madras, Chennai, Tamil Nadu, India.

Acclaimed as a Tamil poet, her areas of interest include post – colonial literatures (especially Sri Lankan and Australian), diasporic literatures (especially Sri Lankan Tamil Diaspora), translation, criticism and performing arts (Tamil Theatre).

 

Currently she is a Freelance Writer and a Performing Artist.  

Educational Qualification

 

:

M.A., M.Phil, Ph.D, (English Literature).

Graduation

:

B.A. English Literature,

Sri Meenakshi College for Women,

Madurai, Tamil Nadu, India.

Post Graduation

:

M.A., English Literature,

Thiagarajar College of Arts & Science,

Madurai Kamaraj University, Madurai,

Tamil Nadu, India.

 

Special Proficiency

:

University Rank Holder (M.A. Degree)

 

Master of Philosophy

:

M.Phil., English Literature,

Thiagarajar College of Arts & Science,

Madurai Kamaraj University, Madurai,

Tamil Nadu. India.

 

Doctor of Philosophy

:

University of Madras,

Chennai, Tamil Nadu, India.

Diasporic Longing and The Changing Contours of Resistance in The Plays of Ernest Thalayasingham Macintyre

 

Academic Details

:

Former Lecturer in the Department of English at Valliammal College for Women, Anna Nagar, Chennai. (from 1988 to 1989)

Former Lecturer in the Department of English at PGP College of Arts & Science, Namakkal. (from 1994 to 1995)

Former Lecturer in the Department of English at Queen Mary’s College, Chennai. (from September 1996 to December 2008)

 

Publications

:

Published a book of Tamil poems titled Enjottu Penn at an International Tamil Literary Conference, January 2004, Chennai (Mithra Publications – Chennai).

Uravukal – Espo complied by S. Ravikumar & T. Sumathy- published in December’04 by Archuna Publications.

Vanapechi collection of Poems – published in December’07 by Uyirmmai Publications.

Pecharavam Ketilaiyo, a compilation of my interviews - published in December ’08 by Uyirmmai Publications. .

Manjanathi, a compilation of 70 poems – published in December’09 by Uyirmmai Publications.

Naveenathuvathai Kamban – published by Annai Muthamizh Publication in December’10.

Katru Konarntha Kadithangal, Kalamum Kavithaiyum, Soll Thodum Thoram, Pampadam – published by Uyirmmai Publication in December’10.

Aruhan, a compilation of 39 poems – published in December’11 by Uyirmmai Publications.

Mayileragu Manasu a compilation of 13 articles – published in May’12 by Vikatan Publication.

Island to Island : The voice of Sri Lankan Australian Playwright : Ernest Thalayasingham Macintyre – published in English, January’12 by Emerald Publications.

Manvasam a compilation of 30 articles – published in June’13 by Vikatan Publication.

Avalukku Veyil Endru Peyar a compilation of 32 poems – published in December’15 by Uyirmmai Publication.

Poonaigal Sorgathirku Selvathillai a compilation of 56 articles – published in December’15 by Uyirmmai Publication.

Literary Activities

:

Presented a paper on the study of Australian Tamils (Tamil Migrants from Srilanka) at the International Conference: Culture, Literature and Translation at the University of Madras, 2001

Translated and read out in English, the Tamil Short Stories of Prabanjan and Arun Vijayarani at the International Conference : Culture, Literature and Translation at the University of Madras, 2001

Organized an International Tamil Literary Conference “Tamil Elakkiam 2004” on January 10th and 11th 2004, Chennai, in which 26 books of reputed Tamil writers were published.  (16 books are from various Tamil writers from Australia, Denmark, Canada and France)

Presented a Paper at the same Literary Conference on “Tamil Literature towards New Directions” on 10.01.2004 at Chennai. 

My poetry collection Enjottu Penn was launched in Sydney on 28.08.2004 by the Sydney Tamil Literary Association.

Addressed a Literary Meeting in Melbourne in September 2004, where Enjottu Penn was introduced and discussed, organized by the Tamil Writers Association, Melbourne.

Invited as Guest speaker for a three day conference organized by FeTNA (Federation of North American Tamils) from July 5 – 8, 2012 at Baltimore, USA.

Invited to present poems in an All India Poets Meet organized by TIASCI – Paris, France on July’13.

Launched the book Island to Island at Sorbonne University, Paris on 06.07.2013, France.

Invited as a Guest of Honour to participate as a guest lecturer making part of the project “REACTIV-ARTE” – funded by the Xunta de Galicia (Galician Autonomous Government) and organized by NGO Implicadas no Desenvolvemento – held in Galicia from April 6th to April 15th, 2015. My poems were translated into Galician language and read out at the Galician Writers Forum – A Coruna and at the Feminist Forum- Santiago de Compostela.   

 

Academic Activities

:

Participated in an Orientation Programme (1999) orgranized by Academic Staff College, University of Madras

Participated in and compered the two-day seminar on ‘Clinics in Sports Medicine’ conducted by the Fitness Foundation Academy, Sports Medicine Centre, Chennai April 2002

Participated in the Refresher Course on Women's Education (Inter-disciplinary)-2002 organized by Mother Teresa Women's University, Kodaikanal

Presented a Paper on The Impact of Migrant Experience on the Individual Psyche in a Multi-Cultural Society Experienced by the Tamil Diaspora in Australia - 2002 organized by The Department of English, University of Madras and The Indian Association for the Study of Australia.

Presented a paper on “The Impact of migrant experience on the individual psyche - in a Multicultural - society experienced by the Tamil Diaspora in Australia” at the International Conference: Understanding Australia : Literature, Culture and Polity, at the University of Madras, 2002

Presented a paper on “Is Australia a sanctuary for people from violent homelands? A multicultural debate” at the IASA International Conference on Identity, Representation and Citizenship at Jawaharlal University (JNU), Jan 2004

Presented a paper on Tamil Dalit Theatre : A study of Pratibha Jayachandran's Play "Koppu" at National Seminnar (2004) on The Indian Dalit Theatre and The Canadian Native Theatre organized by Centre for Canadian Studies University of Madras.

Participated in the Post Graduate Conference Australian Perspectives : An Interdisciplinary Post Graduate Conference, on 27.08.2004 and spoke on “Indian Women”, Department of Political Science, LA TROBE University, Melbourne

Participated a two day conference “PALIMPSESTS : TRANSFORMING COMMUNITIES” at Australia Research Institute, Curtin University on 11th and 12th November, 2004

Participated in the National Conference on "Teaching Postcolinial Texts: Theory and Strategy" - 2005 organized by Department of English, University of Madras, Department of English, Ethiraj College for Women and Indian Association for Commonwealth Literature and Language Studies (IACLALS)

 

 

Participated in the Refresher Course in English (2005) at Stella Maris College, Chennai sponsored by the Department of Higher Education, Tamil Nadu

Participated in an Australia -India Exchange International Conference on Globalisation and Postcolonial Writing organized by Centre for Postcolonial Writing, Monash University, Australia and the Department of English, Calcutta University, India on February, 2006

Participated in the U.G.C Sponsored National Symposium on Literatures of West Asia organized by the Department of English, Stella Maris College on September, 2006.

Presented a paper on "Ethnic Consciousness Generated in the Nationalism of the Modern Nation - State of Sri Lanka - An analysis" - January 2006 by Indian Association for the Study of Australia (IASA) at 3rd International Conference on January 9-11, 2006, Pune

 

Academic Awards and Scholarships

:

General Proficiency Award – Under Graduation (B.A., English Literature)

Proficiency awards in Drama and Dance – Under Graduation (B.A., English Literature)

Proficiency Award – Faculty of Languages, Sriniketan, Madras.

University Rank Holder – Gold Medalist – Madurai Kamaraj University – Post Graduation (M.A., English Literature)

Awarded the FELLOWSHIP FOR THE STUDY OF AUSTRALIA – 2004, by the Australia India Council. As an AIC FELLOW – 2004, visited Australia from August – November 2004, as part of my Doctoral Research

Dr. Vedagiri Shanmugasundaram Prize awarded for the successful Ph.D Scholar of the Research Departments of the Ethiraj College  for Women, Chennai.

 

Literary, Cultural &  Societal Awards

:

Enjottu Pen has been awarded Sirpi Literary Prize, 2004 and Mahakavi Bharathiar Award, 2005.  Some of the poems have been prescribed for Tamil Literature Students at Nandanam Arts College, Loyola College & Ethiraj College for Women’s in Chennai.

 

Vanapechi has been awarded Aelathi Illakia Virudhu – 2008 and Tirupoor Tamil Sanga Virudhu - 2009.

 

Awarded Kavingnar Thirunal Virudhu, 2007.

 

Awarded Young Achiever Trophy in Theatre by Wisdom Publications.

 

An appreciation certificate from Tamil Nadu Iyal Isai Nadaga Mandram (Kalai Panpattu Thurai) for Best Performing Artist in Kurinjipattu Theatrical Drama on 24.12.2006

 

Awarded the prestigious Pavendhar Bharathidasan
Virudhu – 2009
by the Tamil Nadu State Government.

 

A Citation given by University of Madras for Advancing the cause of women in the field of Literature on International Women's Day - 2010.

 

Awarded Best Poet – 2010 Virudhu by Kalam Puthithu, a Literary Organisation for Little Magazines, at Virudhachalam, Tamil Nadu.

Received Ilakkiya Alumai Virudhu – 2011 by Rajapalayam Tamil Sangam

Received Carolina Tamil Sangam Award by Tamil Sangam of Carolina, Inc., 14, July, 2012

Received Kalaignar Porkizhi Award (2013) by BAPASSI for contribution to Tamil Poetry.

 

Received K. Sivathambi Award for Thanimai Thalir Article which was published in Kanayazhi Monthly Magazine at Kanaizhai Ponvizha & Virudhu Vizha 2015.

 

Received Bharathi Pani Selvar Award (2015) by Bharathiyar Sangam at Bharathiyar Vizha, Chennai.

 

Certificate of Honour – UNICEF – for contribution towards – Baby Friendly Initiative

An appreciation certificate by Tamil Nadu Government for donating Blood on 01.12.2004

A one-day National Seminar on Thamizhachi’s poetry and works was organised by the Madurai Dhiraviyam Thayumanavar Hindu College at Tirunelveli, Tamil Nadu, South India on 27.10.2010.  Ph.D Scholars, Research Students and eminent critics have participated and submitted papers on her poetry.

Received Bharathi Award by Vidiyal Foundation on March 2017.

 

Ph.D. Works

:

Three Research scholars have done their M.Phil., theses on Thamizhachi’s work:

 • Thamizhachi Kavithaikalil Ulladagamum Uruvamum (July 2006) by N. Hemalatha, Tamil Department, Distance Education, Alagappa University, Karaikkal, Tamil Nadu, India.
 • Thamizhachiyin Enjottu Penn Oru Aaivu (December – 2006) by H. Abirami, M.A., Alagappa University, Karaikkal, Tamil Nadu, India.
 • Thamizhachiyin Enjottu Penn Kavithaikalil Panmugathanmai (October 2010) by P. Lenin Kumar, Tamil Department, Pachaiappas College, Chennai, Tamil Nadu, India.
 • Thamizhachi Thangapandian Kavithaikalil Panmuga Paarvai (2011-2012) by A. Haaji Ali Sait, M.A. B.Ed., Tamil Department, Madurai college, Madurai, Tamil Nadu, India.  
 • Panmugapaarvayil Thamizhachiyin ‘Vanapechi’ (April 2013) by S. Vinothkumar, Tamil Department, Periyar E.V.R College (Autonomous), Trichy, Tamil Nadu, India.
 • Thamizhachiyin Manvasathil Maruthuva Kuripugalum Makkal Unarvugalum (April 2014) by S. Preetha,  Tamil Department, Periyar E.V.R College (Autonomous), Trichy, Tamil Nadu, India
 • Thamizhachiyin Padaipugai

A Doctorate thesis on Thamizhachiyin Padaipugalil Penniyachinthanai (July 2015) has been submitted by K.V. Manimegalai, Principal, Crescent Teachers Training Institution (Women), Madurai, Tamil Nadu, India.